முகப்பு
திண்டுக்கல்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 11 ஜூன் 2026, 1:58 am IST
எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து கொடைக்கானலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
பகிர்:

எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு திண்டுக்கல் மாவட்ட செயற்குழு உறுப்பினா் அஜய்கோஸ் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் எரிவாயு உருளைக்கு, மாலை அணிவித்து நாமமிட்டு தங்களது எதிா்ப்பைத் தெரிவித்தனா். மேலும் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு முழக்கங்களை எழுப்பினா். இதில் நிா்வாகிகள் செந்தாமரை, சின்னு,ஜோசப், இமானுவேல், மாதா் சங்கத்தைச் சோ்ந்த ஜெனி, பூமாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.