முகப்பு
புதுதில்லி

சாலைகளுக்கு சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்கள்! எஸ்டிஎம்சி திட்டம்

தெற்கு தில்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி) சாலைகளுக்கு சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களை சூட்டுவதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது.

Updated On : 6 ஏப்ரல் 2018, 4:11 am IST
பகிர்:

தெற்கு தில்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி) சாலைகளுக்கு சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களை சூட்டுவதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக எஸ்டிஎம்சி மேயர் கமல்ஜீத் ஷெராவத் வியாழக்கிழமை கூறியதாவது: 
கடந்த ஆண்டு தெற்கு தில்லி மாநகராட்சிக்குச் சொந்தமான சாலைகள், பூங்காக்கள் ஆகியவற்றின் பெயர்களை மாற்றுவது தொடர்பாக 85 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன. அவற்றில் 35 விண்ணப்பங்கள் மாநகராட்சியால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதன்படி, சய்யோக் விஹாரில் உள்ள மாநகராட்சிப் பூங்கா, பி.ஆர்.அம்பேத்கர் பூங்கா எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விஹாஸ் நகரில் உள்ள தெருவொன்றுக்கு பகவான் பரசுராமர் தெரு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பாஜக ஆட்சிக் காலத்தில் ஏற்கெனவே சில தெருக்களுக்கு சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களைச் சூட்டியுள்ளோம். இந்நிலையில் கடந்த ஆண்டு, சாலைகள், பூங்காக்கள் பெயர் மாற்றம் தொடர்பாக கிடைத்த விண்ணப்பங்களில் 6 விண்ணப்பங்கள் சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங்கின் பெயரை சூட்டுமாறு கோரப்பட்டிருந்தன. இந்நிலையில், மாநகராட்சித் தெருக்களுக்கும், பூங்காக்களுக்கும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களை அதிகளவில் சூட்டுவது தொடர்பாக விவாதித்து வருகிறோம் என்றார் அவர்.
 இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "பெயர் மாற்றம் தொடர்பான விண்ணப்பங்கள் பொதுவாக அந்தந்தப் பகுதி கவுன்சிலர்களால் அவையில் சமர்ப்பிக்கப்பட்டு அவை பெயரிடும் குழுவின் பார்வைக்கு அனுப்பப்படும். அவர்கள் அனுமதி அளிக்கும் பட்சத்தில், அவை நிலைக் குழுவின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்படும். நிலைக்குழு அனுமதி அளித்ததும், மாநகராட்சிகளால் பெயர் மாற்றம் செய்யப்படும்' என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments