2016-17-இல் நாட்டில் 28,675 தனியார் கல்லூரிகள்: மாநிலங்களவையில் தகவல்
2016-17-ஆம் ஆண்டில் நாட்டில் 28,675 தனியார் கல்லூரிகளும், 8,177 அரசுக் கல்லூரிகளும் இருந்தன என இணையதள சர்வே மூலம் தெரியவந்துள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.
2016-17-ஆம் ஆண்டில் நாட்டில் 28,675 தனியார் கல்லூரிகளும், 8,177 அரசுக் கல்லூரிகளும் இருந்தன என இணையதள சர்வே மூலம் தெரியவந்துள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.
இது தொடர்பாக மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ் எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் டாக்டர் சத்ய பால் சிங் வியாழக்கிழமை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதில் விவரம்:
"உயர் கல்வி மீதான அகில இந்திய சர்வே' (ஏஐஎஸ்எச்இ) எனும் இணையதளம் அடிப்படையில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மூலம் நடத்தப்பட்ட ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது.
அதன்படி, 2012-13-இல் மொத்தம் 667 பல்கலைக்கழகங்கள், 35,525 கல்லூரிகள், 122 மாநில தனியார் பல்கலைக்கழகங்கள், 292 மாநில பொதுப் பல்கலைக்கழகங்கள் என உள்ளன.
2016-17-இல் இவை முறையே 864 பல்கலைக்கழகங்கள், 40,026 கல்லூரிகள், 233 மாநில தனியார் பல்கலைக்கழகங்கள், 345 மாநில பொது பல்கலைக்கழகங்கள் என உள்ளன.
இணையதள சர்வேயின்படி, தனியார் கல்லூரிகள், அரசுக் கல்லூரிகள் ஆகியவற்றின் எண்ணிக்கையும் கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. அதன்படி, 2012-13-இல் தனியார் கல்லூரிகள் 20,407, அரசுக் கல்லூரிகள் 6,938 என இருந்தன.
2016-17-இல் தனியார் கல்லூரிகள் 28,675, அரசுக் கல்லூரிகள் 8,177 என அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.