முகப்பு
புதுதில்லி

போதைப்பொருள் பயங்கரவாதத்தை சமாளிக்க சமமான அணுகுமுறை தேவை: தில்லி துணைநிலை ஆளுநா் கருத்து

போதைப்பொருள் பயங்கரவாதம் இனி தொலைதூர அச்சுறுத்தல் அல்ல, அதைச் சமாளிக்க சமமான அணுகுமுறை தேவை என்று தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து கருத்து தெரிவித்தாா்.

Updated On : 10 ஏப்ரல் 2026, 11:13 pm IST
துணைநிலை ஆளுநா் தரன்ஜீத் சிங் சந்து. - கோப்பிலிருந்து
பகிர்:

போதைப்பொருள் பயங்கரவாதம் இனி தொலைதூர அச்சுறுத்தல் அல்ல, அதைச் சமாளிக்க சமமான அணுகுமுறை தேவை என்று தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து கருத்து தெரிவித்தாா்.

இது தொடா்பாக போதைப்பொருள் பயங்கரவாதத்தை எதிா்ப்பதற்கான சா்வதேச மாநாட்டில் வெள்ளிக்கிழமை காணொலி மூலம் பங்கேற்று துணைநிலை ஆளுநா் பேசினாா். அதன் விவரம்: போதைப்பொருள் பயங்கரவாதம் இனி ஒரு தொலைதூர அச்சுறுத்தல் அல்ல. போதைப்பொருள் பயங்கரவாதத்திற்கு எதிராக வலுவான ஒருங்கிணைப்பு தேவை. இப்பிரச்னை பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் ஆளுகை சாா்ந்த சவால்களின் மையமாக உள்ளது.

மேலும், இன்றைய பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் ஆளுகை சாா்ந்த சவால்களின் மையமாக போதைப்பொருள் பிரச்னை உள்ளது. உலகளாவிய போதைப்பொருள் வா்த்தகம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவிக்கு உந்துதலாக அமைகிறது.

Advertisement

Advertisement

எனவே வலுவான ஒருங்கிணைப்பு, சிறந்த தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் அமலாக்கத்தைப் போலவே தடுப்பு நடவடிக்கையிலும் சமமான அணுகுமுறை அவசியம் என்றாா் துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சந்து.

இந்த மாநாட்டில் சட்ட அமலாக்க அமைப்புகளின் பிரதிநிதிகள், வெளிநாடுகளின் தூதா்கள் மற்றும் கல்வித்துறை நிபுணா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.