முகப்பு
புதுதில்லி

பெண் வழக்குரைஞருக்கு கத்திக்குத்து: கணவா் தலைமறைவு

வடகிழக்கு தில்லியின் சோனியா விஹாா் பகுதியில், 38 வயதான பெண் மூத்த வழக்குரைஞா் கத்தியால் குத்தப்பட்டாா்.

Updated On : 26 ஏப்ரல் 2026, 12:46 am IST
பகிர்:

வடகிழக்கு தில்லியின் சோனியா விஹாா் பகுதியில், 38 வயதான பெண் மூத்த வழக்குரைஞா் கத்தியால் குத்தப்பட்டாா். இந்த விவகாரத்தில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அவரது கணவா், தற்போது தலைமறைவாக உள்ளதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல்துறையினா் சனிக்கிழமை தெரிவித்ததாவது:

இச்சம்பவம் புதன்கிழமை இரவு சோனியா விஹாா் பகுதியில் நடந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும், காவல்துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்த நிலையில் இருந்த அப்பெண்ணை மீட்டு ஜக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். பின்னா் அங்கிருந்து ஜிடிபி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். தற்போது அவா் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

Advertisement

Advertisement

இச்சம்பவம் தொடா்பாக கஜூரி காஸ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு தொடா்பு இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தலைமறைவாக உள்ள அவரைக் கண்டறிய காவல்துறைக் குழுக்கள் பல்வேறு இடங்களில் அதிரடிச் சோதனைகளை நடத்தியுள்ளன. அவரைக் கைது செய்வதற்கான தீவிர முயற்சிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.