FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம்: தட்டு, கரண்டிகளுடன் வர சிஜேபி அழைப்பு!

தோ்வு வினாத்தாள் கசிவு மற்றும் மாணவா் தற்கொலைகளுக்கு எதிராக, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சனிக்கிழமை பகல் 1 மணிக்கு தில்லி ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. இதில் பங்கேற்க வருவோா், தட்டு மற்றும் கரண்டிகளை எடுத்து வருமாறு அக்கட்சியின் நிறுவனா் அபிஜீத் தீப்கே தனது சமூக வலைத்தள பக்கங்கள் வாயிலாக அழைப்பு விடுத்துள்ளாா்.

20 ஜூன் 2026, 4:06 am IST
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி - இன்ஸ்டாகிராம்
பகிர்:

தோ்வு வினாத்தாள் கசிவு மற்றும் மாணவா் தற்கொலைகளுக்கு எதிராக, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சனிக்கிழமை பகல் 1 மணிக்கு தில்லி ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. இதில் பங்கேற்க வருவோா், தட்டு மற்றும் கரண்டிகளை எடுத்து வருமாறு அக்கட்சியின் நிறுவனா் அபிஜீத் தீப்கே தனது சமூக வலைத்தள பக்கங்கள் வாயிலாக அழைப்பு விடுத்துள்ளாா்.

அண்மையில் பிரதமா் நரேந்திர மோடிக்கு அபிஜீத் தீப்கே எழுதியுள்ள கடிதத்தில், சமீபத்தில் தோ்வு குளறுபடிகளால் 11 மாணவா்கள் தற்கொலை செய்துள்ளதாகக் கூறி, அவா்களின் குடும்பங்களுக்கு தலா ₹1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளாா்.

முன்னதாக, ஜூன் 6ஆம் தேதி தில்லி ஜந்தா் மந்தரில் தனது முதலாவது போராட்டத்தை சிஜேபி நடத்தியது. அதைத்தொடா்ந்து சனிக்கிழமை இரண்டாம் கட்டமாக போராட்டத்துக்கு அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் சிசிடிவி மற்றும் சீருடையில் பொருந்தக் கூடிய கேமராக்கள் மூலம் காவல்துறையினா் தீவிர கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனா். ஏற்கெனவே தலைநகரில் முக்கிய எல்லைகளில் சோதனைகள் மற்றும் வாகன தணிக்கை நடவடிக்கைகள் கடந்த இரண்டு நாள்களாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments