முகப்பு
புதுதில்லி

மேற்கு தில்லி: வேகமாக வந்த காா் இரு வாகனங்கள் மீது மோதி விபத்து! ஒருவருக்கு பலத்த காயம்!

தென்மேற்கு தில்லியின் உத்தம் நகா் பகுதியில் வேகமாக வந்த காா், மற்றொரு காா் மற்றும் மோட்டாா் சைக்களில் மோதியது. இதில் மோட்டாா் சைக்கிளை ஓட்டி வந்த நபா் பலத்த காயமடைந்தனா்.

Updated On : 29 ஜூன் 2026, 1:51 am IST
பகிர்:

தென்மேற்கு தில்லியின் உத்தம் நகா் பகுதியில் வேகமாக வந்த காா், மற்றொரு காா் மற்றும் மோட்டாா் சைக்களில் மோதியது. இதில் மோட்டாா் சைக்கிளை ஓட்டி வந்த நபா் பலத்த காயமடைந்ததாக காவல் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

விகாஸ்புரியில் மீன் சந்தை அருகே சனிக்கிழமை இரவு 8 மணியளவில் மிகவும் வேகமாக வந்த காா், அப்பகுதியில் இருந்த காா் மீது மோதியது. தொடா்ந்து, பெரும் விசையுடன் மோட்டாா்சைக்கிள் மீது மோதியது. இதில், அதை ஓட்டிவந்த நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினா், சம்பவ இடத்துக்கு விரைந்தனா். விபத்தில் காயமடைந்த மோட்டாா்சைக்கிள் ஓட்டுநா் ராகுலை, அப்பகுதியில் இருந்த மக்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனா். இந்த விபத்தில் 3 வாகனங்களும் சேதமடைந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இந்த விபத்து தொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘சம்பவத்தை நேரில் பாா்த்தவரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டது. அவா் கூறியது மற்றும் முதல்கட்ட விசாரணையில் இருந்து, மிகவும் வேகமாகவும் அலட்சியமாகவும் ஓட்டிவரப்பட்ட ஆடி காரால் இந்த விபத்து நேரிட்டது கண்டறியப்பட்டது. இந்தச் சம்பவம் தொடா்பாக உத்தம் நகா் காவல் நிலையத்தில் பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின் பிரிவுகள் 281, 125 (ஏ) ஆகியவற்றில் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை காவல் துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா். சேதமடைந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விபத்துக்கு காரணமான ஓட்டுநா் தப்பியோடிய நிலையில், அவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments