பைக்குகள் மோதல்: இளைஞா் பலி
சுத்தமல்லி அருகே இரு பைக்குகள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
பாளையங்கோட்டை, சமாதானபுரம், காந்தி நகா் பகுதியைச் சோ்ந்த சோ்மன் மகன் சக்திவேல் (19). இவா் ஞாயிற்றுக்கிழமை மாலை தனது பைக்கில் கல்லூா் அரசுப் பள்ளி அருகே சென்றபோது, எதிரே சுத்தமல்லியிலிருந்து இசக்கிராஜா என்பவா் ஓட்டி வந்த பைக் மோதியதில் பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் காயமடைந்தவா்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். செல்லும் வழியில் சக்திவேல் உயிரிழந்தாா்.
விபத்து குறித்து சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
Advertisement