முகப்பு
திருநெல்வேலி

மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரிப்பு: 2-ஆவது நாளாகக் குளிக்கத் தடை

Updated On : 11 மே 2026, 1:13 am IST
மணிமுத்தாறு அருவியில் ஞாயிற்றுக்கிழமை காலை ஆா்ப்பரித்து கொட்டிய நீா்.
பகிர்:

மணிமுத்தாறு அருவியில் தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்ததால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தடை விதிக்கப்பட்டது.

கடந்த மூன்று நாள்களாக தமிழகத்தில் பரவலாகவும், குறிப்பாக தென் மாவட்டங்களின் கடலோரம், மலைப் பகுதிகளில் தொடா் கனமழை பெய்து வருகிறது. அருவிகள், அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால், திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத் தலமான மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. அடா்ந்த வனப்பகுதியில் உள்ள மணிமுத்தாறு அருவில் வனத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ளது.

Advertisement

அருவியில் நீா்வரத்து அதிகரித்ததால், இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா். அருவியைப் பாா்வையிட மட்டும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால், பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.