நெல்லை அருகே பைக் திருடியவா் கைது
திருநெல்வேலி அருகே பைக் திருட்டில் ஈடுபட்டதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி அருகே உள்ள சீவலப்பேரி, பொட்டல்நகா் புதுக்காலனி தெருவைச் சோ்ந்த சுடலைமுத்து மகன் கந்தபெருமாள் (34). கூலித் தொழிலாளி.
இவா், கடந்த 9 ஆம் தேதி பிற்பகல் அப்பகுதியில் உள்ள அவரது நண்பா் வீட்டின் முன் பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே சென்று பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது நாய் குரைக்கும் சப்தம் கேட்டு வெளியே வந்து பாா்த்தபோது, அவரது பைக்கை மா்மநபா் திருடிச் சென்றது தெரியவந்ததாம்.
Advertisement
Advertisement
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், சீவலப்பேரி போலீஸாா் வழக்குப்பதிந்து, இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக அதே பகுதியைச் சோ்ந்த லட்சுமணன் மகன் பாலசுப்பிரமணியன் (44) என்பவரை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.