கூட்டுறவு சங்க ஊழியர் தற்கொலை
நித்திரவிளை அருகே கூட்டுறவு சங்க ஊழியர் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
நித்திரவிளை அருகே கூட்டுறவு சங்க ஊழியர் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
நித்திரவிளை அருகேயுள்ள காஞ்சாம்புறம் தெற்கு கலிங்கராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பாலன் மகன் மணிகண்டன் (43). இவர் வைக்கல்லூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
இவரது மனைவி மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மணிகண்டன் சில நாள்களாக மன வருத்தத்தில் இருந்தாராம். இந்நிலையில், அவர் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். நித்திரவிளை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகிறார்.
Advertisement
Advertisement