முகப்பு
கன்னியாகுமரி

கருங்கல்லில் கிறிஸ்துமஸ் விழா

கன்னியாகுமரி மாவட்ட ஐக்கிய இளைஞர் பேரவை சார்பில் கருங்கல்லில் கிறிஸ்துமஸ் விழா, பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 25 டிசம்பர் 2018, 7:11 am IST
பகிர்:

கன்னியாகுமரி மாவட்ட ஐக்கிய இளைஞர் பேரவை சார்பில் கருங்கல்லில் கிறிஸ்துமஸ் விழா, பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அமைப்பின் தலைவர் காட்வின் தலைமை வகித்தார். கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க செயலர் ஜாண்தங்கம் முன்னிலை வகித்தார். விழாவில், தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி என். தளவாய்சுந்தரம், முன்னாள் ஐ.ஜி ராமசுப்பிரமணி,ஜேம்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜேம்ஸ் பிரேம்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, கருங்கல் கருமாவிளை சி.எஸ்.ஐ ஆலய வளாகத்தில் இருந்து கிறிஸ்துமஸ் தாத்தா பேரணி தொடங்கியது. இப்பேரணி காவல் நிலையம், கூனாலுமூடு, பாலூர், மூசாரி, பேருந்து  நிலயைம் வழியாக சந்தை திடலை வந்தடைந்தது. தப்பாட்டம், கரகாட்டம், களரி உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மரியா கல்லூரியில்...
ஆற்றூர் மரியா பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, அக்கல்விக் குழுமங்களின் தலைவர் ஜி. ரசல்ராஜ் தலைமை வகித்து கிறிஸ்துமஸ் கேக் வெட்டினார். 
அருள்பணியாளர் சேவியர் சுந்தர் பிரார்த்தனை நடத்தினார். கல்லூரியின் துணைத்தலைவர் பி. ஷைனி தெரசா, கல்லூரி அலுவலர்கள் பங்கேற்றனர். குழு பாடல்கள், நடனங்கள், நாடகங்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கிறிஸ்துமஸ் தாத்தா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments