குலசேகரத்தில் ஷீரடி சாய்பாபா ஆராதனைத் திருவிழா
குலசேகரத்தில் ஷீரடி சாய்பாபா ஆராதனைத் திருவிழா நடைபெற்றது.
குலசேகரத்தில் ஷீரடி சாய்பாபா ஆராதனைத் திருவிழா நடைபெற்றது.
குலசேகரம் ஸ்ரீ ஷீரடி சாய்கிருஷ்ணா பஜனை மண்டலி சார்பில் எஸ்.ஆர்.கே.பி.வி. பள்ளி வளாத்திலுள்ள சாய் கிருஷ்ணா அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஷீரடி சாய் கிருஷ்ணா பஜனை மண்டலியின் 4ஆவது ஆண்டு தொடக்கவிழா விழா, ஷீரடி சாய்பாபாவின் 100ஆவது ஆண்டு சமாதி நினைவு விழா, சிறப்பு ஆராதனைத் திருவிழா மற்றும் இசைத்தட்டு வெளியீட்டு விழா ஆகியன நடைபெற்றது.
நிகழ்ச்சியின்போது, 501 லிட்டர் பாலபிஷேகம், பஜனை, ஆரத்தி, அருளுரைகள், கூட்டுப்பிராத்தனை, தியானம், புஷ்பாபிஷேக வழிபாடுகள் உள்ளிட்டவை நடைபெற்றன.
நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.கே. கல்விக் குழுமங்களின் தலைவர் ஆர். அப்புநடேசன், வள்ளலார் பேரவை நிர்வாகி பத்மேந்திரா சுவாமிகள் மற்றும் குலசேகரம் சாய்கிருஷ்ணா பஜனை மண்டலி நிர்வாகிகள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.