பார்வதிபுரம் மேம்பாலப் பணி: ஆய்வு செய்யக் கோரி ஆட்சியரிடம் மனு
பார்வதிபுரம் மேம்பாலப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சி சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
பார்வதிபுரம் மேம்பாலப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சி சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
காங்கிரஸ் குமரி கிழக்கு மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் பிரின்ஸ் எம்எல்ஏ தலைமையில் ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரேவிடம் அளித்துள்ள மனு: பார்வதிபுரம் மற்றும் மார்த்தாண்டம் பகுதிகளில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகள் தரமானதாக இல்லை என்ற புகார் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ரெடிமேட் பீம்கள் பயன்படுத்தி இரும்புத் தூண்கள் மீது அவை பொருத்தப்பட்டு அதற்கு மேல் கான்கிரீட் போடும் வகையில் அமைக்கப்படுகிறது.
இந்த மேம்பாலம் அதிகஎடை கொண்ட லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் சென்றால் இடிந்து விடும் என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. இந்த பாலங்கள் சரியான முறையிலும், தரமான முறையிலும் கட்டப்படவில்லை என்பதை அறிந்தோம்.
எனவே, மேம்பாலப் பணிகளை தரமானதாக அமைக்க வல்லுநர் குழுவை அமைத்து ஆய்வு செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில், நாகர்கோவில் நகர காங்கிரஸ் தலைவர் அலெக்ஸ், மாவட்டத் துணைத் தலைவர் மகேஷ்லாசர், வட்டாரத் தலைவர்கள் அசோக்ராஜ், சேவாதளம் எனல்ராஜ், வழக்குரைஞர் பிரியதர்ஷினி, மகாலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.