முகப்பு
கன்னியாகுமரி

பொது இடத்தில் இறைச்சி வெட்டினால் நடவடிக்கை: நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை

பொது இடங்களில் இறைச்சி வெட்டினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Updated On : 23 ஜூலை 2018, 7:57 am IST
பகிர்:

பொது இடங்களில் இறைச்சி வெட்டினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
குளச்சல் பகுதியில் உள்ள இறைச்சிக் கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து, குளச்சல் நகராட்சி சுகாதார ஆய்வாளர் வர்க்கீஸ் தியாகராஜன் தலைமையில்,  பள்ளிரோடு,  பீச்ரோடு, அண்ணாசிலை பகுதியில் உள்ள இறைச்சிக் கடைகளில் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தப்பட்டது. அப்போது, இறைச்சிக் கடைகள் முறையான அனுமதி பெற்று நடத்தப்பட வேண்டும்; தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது; மீறினால் அபராதம் விதிக்கப்படும். இறைச்சிக் கடைகளில் திறந்த நிலையில் இறைச்சிகளை வைக்கக் கூடாது. அவற்றை மறைத்து சிவப்பு துணி கட்டவேண்டும். பொது இடங்களில் இறைச்சி வெட்டுதல், விற்பனை செய்தல் கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments