குமரியில் கண் மருத்துவர்களுக்கு பயிலரங்கு
தேசிய அளவில் கண் மருத்துவர்கள், பயிற்சி மாணவர்களுக்கான கண் பரிசோதனையில் நவீன கண்டுபிடிப்புகள்
தேசிய அளவில் கண் மருத்துவர்கள், பயிற்சி மாணவர்களுக்கான கண் பரிசோதனையில் நவீன கண்டுபிடிப்புகள் குறித்து கன்னியாகுமரியில் பயிலரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இப்பயிலரங்கிற்கு நாகர்கோவில் பெஜான்சிங் கண் மருத்துவமனைத் தலைவர் எஸ்.எம்.பெஜான்சிங் தலைமை வகித்தார். பெஜான்சிங் கண் மருத்துவக் கல்லூரி முதல்வர் பிராயன் சக்கரவர்த்தி முன்னிலை வகித்தார். பயிலரங்கினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் தொடங்கி வைத்தார்.
பயிலரங்கு மலரை கல்லூரி நிர்வாகமேலாளர் டாக்டர் ருஸிதா வெளியிட எஸ்.பி. பெற்றுக் கொண்டார். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் திருவேங்கட செந்தில்குமார் பங்கேற்றுப் பேசினார். பயிலரங்கில் கண் மருத்துவத்தில் மேம்படுத்தப் பட்ட அதி நவீன கண்டுபிடிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் இருந்து கண் மருத்துவர்கள், கண் கண்ணாடி நிபுணர்கள், பார்வை குறைவு நிபுணர்கள், பயிற்சி மாணவர்கள் என 1000 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
நேசன் பெரைரா ஆண்டறிக்கை வாசித்தார். சலீல் அகமது வரவேற்றார். முகிசீம் நன்றி கூறினார்.