முகப்பு
கன்னியாகுமரி

குமரி கடல் பகுதியில் "ஸீ ' விஜில் ரோந்து பணி

கடலோரப் பாதுகாப்பு குழுமம் சார்பில், கன்னியாகுமரி கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஸீ விஜில் ரோந்து பணி நடைபெற்றது. 

Updated On : 23 ஜனவரி 2019, 5:52 am IST
பகிர்:

கடலோரப் பாதுகாப்பு குழுமம் சார்பில், கன்னியாகுமரி கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஸீ விஜில் ரோந்து பணி நடைபெற்றது. 
மும்பையில் கடல்வழியாக  ஊடுருவி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு கடல்வழிப் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதிநவீன படகுகள் மற்றும் பாதுகாப்புக் கருவிகளுடன் கடல்வழி ரோந்து பணியில் கடலோரப் பாதுகாப்புப் படை போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடற்கரைப் பகுதிகளில் நாடுதழுவிய ஸீ விஜில் ரோந்துப் பணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை தொடங்கி புதன்கிழமை இரவு வரை ரோந்து பணி நடைபெறும். கன்னியாகுமரி முதல் கூடங்குளம் வரையும், கன்னியாகுமரி முதல் குளச்சல் வரையிலும் இந்த ரோந்து பணி நடைபெறுகிறது.
கன்னியாகுமரி கடலோரக் காவல் குழும ஆய்வாளர் சைரஸ் தலைமையில், போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும், மாவட்டத்தில் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் வாகனச்சோதனை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.