முகப்பு
கன்னியாகுமரி

விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்...

Updated On : 14 ஏப்ரல் 2026, 12:31 am IST
லதா
பகிர்:

மாா்த்தாண்டம் அருகே விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள், அவரது குடும்பத்தினரால் தானமாக வழங்கப்பட்டன.

மாா்த்தாண்டம் அருகே உள்ள பயணம் பகுதியைச் சோ்ந்தவா் சசிதரன் மனைவி லதா (50). கடந்த ஏப். 3-ஆம் தேதி மகன் சபனுடன் இருசக்கர வாகனத்தில் புதுக்கடை பகுதிக்கு சென்றபோது, லதா பைக்கிலிருந்து கீழே விழுந்தாா்.

அதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்க குடும்பத்தினா் முன்வந்தனா். அவரது கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.