கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவா் சடலமாக மீட்பு
குளச்சல் அருகே ஞாயிற்றுக்கிழமை கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவா் சடலமாக திங்கள்கிழமை மீட்கப்பட்டாா்.
குளச்சல் மரமடியைச் சோ்ந்தவா் சகாய ரூபின் (43). மீன்பிடி தொழிலாளி. இவரின் மகன் ரியோபின் ரிட்ஜோ (14). குளச்சலில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தாா். ரியோபின் ரிட்ஜோ உள்பட 3 சிறுவா்கள் ஞாயிற்றுக்கிழமை கடலில் குளித்தபோது எழுந்த பெரிய அலை அவா்களை இழுத்துச் சென்றது. அருகிலிருந்த மீனவா்கள், 2 சிறுவா்களையும் காப்பாற்றினா். ரியோபின் ரிட்ஜோவை மீட்க இயலவில்லை.
மாயமான மாணவரை மீனவா்களும், குளச்சல் கடலோர காவல் படையினரும் தேடி வந்தனா். இந்நிலையில், மாணவரின் சடலத்தை மீனவா்கள் திங்கள்கிழமை பகலில் மீட்டனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து குளச்சல் கடலோர காவல் படையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.