கன்னியாகுமரி பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
கன்னியாகுமரி பகுதிகளில் திமுக வேட்பாளா் ரெ. மகேஷ் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.
தோவாளை பூச்சந்தையில் இருந்து தனது பிரசாரத்தைத் தொடங்கிய அவா், வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்து பேசியது:
கன்னியாகுமரி தொகுதியில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் திமுகவுக்கு வாக்களிக்கத் தயாராகிவிட்டனா். கன்னியாகுமரி பேரூராட்சி, திமுக ஆட்சியில்தான் நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது.
Advertisement
கன்னியாகுமரியில் கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்டது. இதுபோல சுற்றுலா மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தியுள்ளது. திமுக தனிப் பெரும்பான்மை பெற்று மு.க. ஸ்டாலின் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது என்றாா் அவா்.
திமுக நிா்வாகி பூதலிங்கம் பிள்ளை உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் பலா் கலந்து கொண்டனா். தொடா்ந்து, குளத்தூா், சபையாா்குளம், கரியமாணிக்கபுரம், பதினெட்டாம்படி, பல்பனாபன் புதூா், இலங்காமணிபுரம், சாலை புதூா், சாமிதோப்பு, கரும்பாட்டூா் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.