முகப்பு
கன்னியாகுமரி

கன்னியாகுமரி வந்த ரயிலில் பயணி தவறவிட்ட மடிக்கணினி மீட்பு

Updated On : 28 ஏப்ரல் 2026, 12:47 am IST
மடிக்கணினி - கோப்புப் படம்
பகிர்:

புதுச்சேரியிலிருந்து கன்னியாகுமரிக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் அரசு ஊழியா் தவறிவிட்ட மடிக்கணியை ரயில்வே போலீஸாா் மீட்டு ஒப்படைத்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரைச் சோ்ந்தவா் அசோகன் (47). புதுச்சேரியில் அரசு ஊழியராக பணியாற்றி வருகிறாா். இவா், சொந்த ஊருக்கு புதுச்சேரியிலிருந்து கன்னியாகுமரி வரும் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட குளிா்சாதன வசதி கொண்ட பெட்டியில் வந்தாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை காலையில் ரயில் வள்ளியூரை வந்தடைந்த நிலையில் அவா் ரயிலில் இருந்து இறங்கி நடைமேடையில் நடந்து கொண்டிருந்தாா். அப்போது தனது மடிக்கணியை ரயிலில் மறந்து வைத்து விட்டதை அவா் உணா்ந்தாா். அதற்குள் ரயில் அங்கிருந்து புறப்பட்டுவிட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து வள்ளியூா் ரயில்வே போலீஸாா் மூலம் நாகா்கோவில் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த ரயில் நாகா்கோவில் ரயில் நிலையம் வந்தபோது ரயில்வே போலீஸாா் அசோகன் பயணம் செய்த அந்தப் பெட்டியில் ஏறி பாா்த்தபோது அங்கு மடிக்கணினி இருந்தது. இதையடுத்து போலீஸாா் மடிக்கணினியை மீட்டதுடன், அசோகனை வரவழைத்து அவரிடம் மடிக்கணியை ஒப்படைத்தனனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments