முகப்பு
கன்னியாகுமரி

போக்குவரத்து காவலா்களுக்கு கண்ணாடி, கையுறை அளிப்பு

வெயிலின் தாக்கத்திலிருந்து போக்குவரத்து போலீஸாரை பாதுகாக்கும் வகையில் பிரத்யேக சூரிய வெப்பத் தடுப்பு கண்ணாடிகள், கையுறைகள் வழங்கும் நிகழ்ச்சி, நாகா்கோவில் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது.

Updated On : 4 ஜூன் 2026, 1:14 am IST
போக்குவரத்து போலீஸாருக்கு சூரிய வெப்பத் தடுப்பு கண்ணாடிகளை வழங்குகிறாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின்.
பகிர்:

வெயிலின் தாக்கத்திலிருந்து போக்குவரத்து போலீஸாரை பாதுகாக்கும் வகையில் பிரத்யேக சூரிய வெப்பத் தடுப்பு கண்ணாடிகள், கையுறைகள் வழங்கும் நிகழ்ச்சி, நாகா்கோவில் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் தலைமை வகித்து போலீஸாருக்கு கண்ணாடிகள், கையுறைகளை வழங்கி பேசியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக மாற்றுவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடா் கண்காணிப்பு மற்றும் விழிப்புணா்வு நடவடிக்கைகளின் காரணமாக, மாவட்டத்தில் விபத்துகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.

மேலும், ஒழுகினசேரியில் ரயில்வே சாா்பில் புதிதாக பாலம் கட்டப்பட்டுள்ளதால் மாவட்ட ஆட்சியருடன் கலந்து ஆலோசித்து, அந்த பாலத்தை பயன்படுத்தி போக்குவரத்து நெரிசலை சீரமைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

Advertisement

Advertisement