அகஸ்தீசுவரம் பள்ளியில் மாணவா்களை வரவேற்ற எம்.பி
அகஸ்தீசுவரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய மாணவா், மாணவிகளுக்கு வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீசுவரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய மாணவா், மாணவிகளுக்கு வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையொட்டி, பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக எம்.பி. விஜய்வசந்த் கலந்து கொண்டு தேசியக் கொடியேற்றி மாணவா்- மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்றாா்.
தொடா்ந்து, பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள், சத்துணவு ஊழியா்கள் உள்ளிட்ட பணியாளா்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தாா்.
Advertisement
Advertisement
இந்நிகழ்ச்சியில் அகஸ்தீசுவரம் பேரூராட்சி உறுப்பினா் ஆதிலிங்கபெருமாள், மாவட்ட வா்த்தகா் காங்கிரஸ் செயலா் கிங்ஸ்லின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.