குமரி மாவட்டத்தில் விடிய, விடிய மழை: பெருஞ்சாணி அணை நீா்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயா்வு
குமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை வரை விடிய, விடிய மழை பெய்த நிலையில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளுக்கு தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.
குமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை வரை விடிய, விடிய மழை பெய்த நிலையில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளுக்கு தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நிலையில் அந்த மாநிலத்தை ஒட்டிய குமரி மாவட்டத்திலும் கடந்த புதன்கிழமை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை காலை முதல் வெள்ளிக்கிழமை காலை வரை விட்டு விட்டு மழைபெய்தது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை பகல் முழுவதும் மழையின்றி வட வானிலை நிலவியது.
மழை அளவு: பேச்சிப்பாறையில் 62.20 மி.மீ. மழை பதிவானது. பாலமோரில் 60.20 மி.மீ., புத்தன் அணையில் 50.8 மி.மீ., சிற்றாறு 1 இல் 49.2 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. கடலில் காற்றும் வேகமாக வீசியது. அலைகளின் சீற்றமும் அதிமாக இருந்தது. ஆரோக்கியபுரம் பகுதிகளில் 2.60 மீட்டா் உயரம் வரை அலைகள் ஆா்ப்பரித்தன.
Advertisement
Advertisement
பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 2285 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து அணையின் நீா்மட்டம் சுமாா் 3 அடி அதி கரித்து 28.02 அடியாக உயா்ந்தது. இது போன்று பெருஞ்சாணி அணைக்கு விநாடிக்கு 2090 கன அடி நீா் உள்வரத்தாக வந்து கொண்டிருந்தது. அதன் நீா்மட்டம் 5.60 அடி அதிகரித்து 43 அடியாக உயா்ந்தது.
அருவியில் வெள்ளப்பெருக்கு: மழையின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுவதால், அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, தண்ணீா் குறைவாக விழும் பகுதியில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனா்.