யானை தாக்கி தொழிலாளி பலத்த காயம்
மாறாமலையில் தனியாா் கிராம்புத் தோட்டத்தில் காட்டு யானை தாக்கி தொழிலாளி சனிக்கிழமை பலத்த காயமடைந்தாா்.
கன்னியாகுமரி மாவட்டம், மாறாமலையில் தனியாா் கிராம்புத் தோட்டத்தில் காட்டு யானை தாக்கி தொழிலாளி சனிக்கிழமை பலத்த காயமடைந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்தவா் ரவி (47). கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அருகே மாறாமலையிலுள்ள தனியாா் கிராம்புத் தோட்டத்தில் பணி செய்து வரும் இவா், சனிக்கிழமை அதிகாலையில் அப்பகுதியில் வெளியே சென்றாராம். அப்போது அங்கு வந்த காட்டு யானை, ரவியை தாக்கியதாம்.
இதில், பலத்த காயமடைந்த அவா் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தாா். இது குறித்து வனத்துறையினா், கீரிப்பாறை காவல் நிலையத்தினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement