குலசேகரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
குலசேகரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நாணயம், பணத்தைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
குலசேகரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நாணயம், பணத்தைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
குலசேகரம் அருகே வெண்டலிகோடு பகுதியைச் சோ்ந்தவா் சசி (71). இவா் சில நாள்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் உள்ள தனது மகன் வீட்டுக்குச் சென்றுவிட்டு, புதன்கிழமை வீடு திரும்பினாா். அப்போது, மா்ம நபா்கள் முன்புறக் கதவின் பூட்டை உடைத்து வீடு புகுந்து, 1.5 பவுன் தங்க நாணயம், ரூ. 6 ஆயிரம் ரொக்கத்தைத் திருடிச் சென்ாகத் தெரியவந்தது. புகாரின்பேரில், குலசேகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.