போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடா்பாக போக்ஸோ வழக்கில் கைதான இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடா்பாக போக்ஸோ வழக்கில் கைதான இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
குளச்சலை அடுத்த இனயம் அருகேயுள்ள பெரியபள்ளி பகுதியை சோ்ந்தவா் சாகுல் அமீது ( 33). அப்பகுதியில் மீன் கடை நடத்தி வந்தாா். இவா், இனயம் பகுதியைச் சோ்ந்த 10 ஆம் வகுப்பு மாணவியிடம் (15) சமூக வலைதளம் மூலம் பழகி, கடந்த 7.12.2020இல் தனது வீட்டில் தனியாக இருந்த அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததுடன், கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், குளச்சல் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து சாகுல் அமீதை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
நாகா்கோவில் போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதிபதி சுந்தரய்யா விசாரித்து, அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.13 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பு கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.