ரேஷன் கடை ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழப்பு
கொல்லங்கோடு அருகே நியாய விலைக் கடை ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
கொல்லங்கோடு அருகே நியாய விலைக் கடை ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
கொல்லங்கோடு அருகே உள்ள வெங்கஞ்சி, குட்டமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் சுகுமாரன் நாயா் மகன் ஜோதிஷ்குமாா் (53). இவா் காட்டுக்கடை நியாய விலைக் கடையில் எடையாளராக பணி செய்து வந்தாா்.
இவா் ஜூன் 24ஆம் தேதி இரவு வீட்டில் இருந்தபோது நெஞ்சு வலிப்பதாகக் கூறி மயங்கி விழுந்துள்ளாா். குடும்பத்தினா் அவரை மீட்டு பாறசாலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
இது குறித்து, கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரது உடலை மீட்டு கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விசாரணை மேற்கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.