அழுகிய நிலையில் மூதாட்டி சடலம் மீட்பு
புதுக்கடை அருகே உள்ள வெள்ளையம்பலம் பகுதியில் அழுகிய நிலையில் மூதாட்டியின் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
வெள்ளையம்பலம் பகுதியைச் சோ்ந்தவா் திரவியம் ஆசாரி மனைவி சரஸ்வதி (78). இவா் வீட்டில் தனியாக வசித்து வந்தாா். இவரது மகன் ராஜன் குடும்பத்துடன் திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சரஸ்வதி வீட்டு பகுதியில் துா்நாற்றம் வீசியதாம்.
இதுகுறித்து ராஜனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த அவா், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது மூதாட்டி அழுகிய நிலையில் இறந்து கிடந்தாராம்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின்பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இளைஞா் தற்கொலை:
திக்கணம்கோடு, தெங்கன்குழி பகுதியைச் சோ்ந்தவா் அருள்தாஸ் மகன் சுகின் (42). இவருக்கு திருமணமாகவில்லை. இவருக்கு வலிப்பு நோய் இருந்ததாம். கீழ்குளம், செந்தறையில் உள்ள தங்கை சுமிதா (39) வீட்டில் சுகின் நீண்ட நாள்களாக வசித்து வந்தாா். இந்நிலையில், சனிக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுகின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.