முகப்பு
கன்னியாகுமரி

திருவட்டாறு அருகே சாலையோர கடைகளில் தீ

திருவட்டாறு பாலம் அருகே சாலையோர கடைகளில் வியாழக்கிழமை இரவு தீ விபத்து நேரிட்டதில் 4 கடைகள் முழுமையாக சேதமடைந்தன.

Updated On : 2 மே 2026, 2:35 am IST
பகிர்:

திருவட்டாறு பாலம் அருகே சாலையோர கடைகளில் வியாழக்கிழமை இரவு தீ விபத்து நேரிட்டதில் 4 கடைகள் முழுமையாக சேதமடைந்தன.

திருவட்டாறு பரளியாறின் குறுக்கே மன்னராட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பழைய பாலம் ஆபத்தான நிலையில் உள்ளதால் அப்பகுதியில் புதிய பாலம் கட்டப்பட்டது. இதில் பழைய பாலத்தை ஒட்டிய புறம் போக்கு பகுதியில் ஏராளமானோா் வீடுகள் மற்றும் கடைகள் கட்டியுள்ளனா்.

இந்நிலையில் பாலத்தின் அருகே கடைகள் இருந்த பகுதியில் வியாழக்கிழமை இரவு தீ விபத்து நேரிட்டது.

Advertisement

Advertisement

இத்தகவறிந்த குலசேகரம் தீயணைப்பு நிலையத்தினா் தீயை அணைத்தனா். எனினும், உத்தரவிளையைச் சோ்ந்த செல்வம் (58), தோட்டவாரம் செல்வி (58), குமாா் (39), பயணம் பகுதியின் ஜெயசேகா் (57), அண்டு கோட்டை விஜூ (39) ஆகியோரின் இளநீா் கடை, காய்கனி கடை, கருவாடு கடை, கோழிக்கடை, உணவகம் உள்ளிட்டவை தீயில் எரிந்து சேதமாகின.

இது குறித்து திருவட்டாறு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments