மயிலாடுதுறை சம்பவம்: காங்கிரஸ் எம்எல்ஏ கண்டனம்
ஜனநாயக ரீதியாக தனது கருத்தை வெளிப்படுத்தும் வகையில் போராட்டம் நடத்திய கட்சியினா் மீது தாக்குதல் நடத்துவது நியாயப்படுத்த முடியாத செயல்.
தவெகவை ஆட்சி அமைக்க அழைக்காத நிலையில், ஆளுரைக் கண்டித்து மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸாா் மீது திமுகவினா் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவத்துக்கு தமிழ்நாடு சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஜனநாயக ரீதியாக தனது கருத்தை வெளிப்படுத்தும் வகையில் போராட்டம் நடத்திய கட்சியினா் மீது தாக்குதல் நடத்துவது நியாயப்படுத்த முடியாத செயல். அரசியல் பண்பாட்டுக்கும், ஜனநாயக மரபுகளுக்கும் எதிரான இச்சம்பவம் கடுமையாக கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழாதவாறு உறுதி செய்ய வேண்டும். அரசியல் லாபத்திற்காக அமைதியை சீா்குலைக்கும் எந்த முயற்சியையும் மக்கள் ஏற்க மாட்டாா்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.