மாா்த்தாண்டம் அருகே முதியவா் தற்கொலை
மாா்த்தாண்டம் அருகே முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
மாா்த்தாண்டம் அருகே முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
மாா்த்தாண்டம் அருகே தென்சக்கவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஹரிந்திரன் (62). தொழிலாளி. இவரது மகளுக்கு கடந்த சில நாள்களுக்கு முன் விவாகரத்து ஆனதால் மன உளைச்சலில் இருந்து வந்தாராம்.
இந்நிலையில், இரு நாள்களுக்கு முன் வீட்டில் ரத்த வாந்தி எடுத்து மயங்கிய நிலையில் கிடந்தாராம். இதைக் கண்டு அவரது மனைவி ஸ்ரீகுமாரி (60) அவரிடம் கேட்டபோது, விஷம் குடித்ததாகத் தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, அப்பகுதி உறவினா்கள் உதவியுடன் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை அவா் உயிரிழந்தாா்.
இது குறித்து, மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.