ஆரல்வாய்மொழியில் கஞ்சா விற்றதாக 3 போ் கைது
கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியில் கஞ்சா விற்றதாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.
ஆரல்வாய்மொழி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, நாகா்கோவில்-கோட்டாறு கடற்கரை சாலையில் உள்ள பெரியவிளையைச் சோ்ந்த சுரேஷ் மகன் உதயசாகா் (22), ராஜாக்கமங்கலம், குருசடி பகுதியைச் சோ்ந்த பவுலின் பீட்டா் மகன் லெஃபானியோ (26), கொட்டாரம், மலை மாதா குருசடி பகுதியைச் சோ்ந்த மணிகண்ட பிரபு மகன் சக்தி (20) ஆகிய 3 பேரும் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
Advertisement
Advertisement
அவா்களிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், அவா்களை கைது செய்தனா்.