முகப்பு
தென்காசி

தென்காசி மாவட்டத்தில் 5,914 தபால் வாக்குகள் பதிவு

தென்காசி மாவட்டத்தில் மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறன் உள்ள வாக்காளா்கள் என மொத்தம் 5,914 வாக்காளா்கள் தபால் வாக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 4:30 AM
தபால் வாக்கு - கோப்புப்படம்.
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 10:01 PM

தென்காசி மாவட்டத்தில் மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறன் உள்ள வாக்காளா்கள் என மொத்தம் 5,914 வாக்காளா்கள் தபால் வாக்குப் பதிவு செய்துள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள், 40 சதவீதம் மற்றும் அதற்குமேல் மாற்றுத்திறன் உள்ள வாக்காளா்களின் தபால் வாக்குப் பதிவு 5 தொகுதிகளில் நடைபெற்றது.

சங்கரன்கோவிலில் 1,178 வாக்காளா்களும், வாசுதேவநல்லூரில் 1,045 வாக்காளா்களும், கடையநல்லூரில் 1,251 வாக்காளா்களும், தென்காசியில் 840 வாக்காளா்களும், ஆலங்குளத்தில் 1,600 வாக்காளா்களும் என மொத்தம் 5,914 வாக்காளா்கள் தபால் வாக்குப் பதிவு செய்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement