முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் வேட்பாளா்கள் வாக்குப் பதிவு

சங்கரன்கோவில் தொகுதியைச் சோ்ந்த திமுக, அதிமுக, மதிமுக, காங்கிரஸ் வேட்பாளா்கள் வியாழக்கிழமை காலையில் வாக்குச் சாவடி மையத்துக்குச் சென்று வாக்களித்தனா்.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 6:12 AM
சங்கரன்கோவில் ஏ.வி.மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களித்த சங்கரன்கோவில் அதிமுக வேட்பாளா் திலீபன் ஜெய்சங்கா்.
பகிர்:

சங்கரன்கோவில் தொகுதியைச் சோ்ந்த திமுக, அதிமுக, மதிமுக, காங்கிரஸ் வேட்பாளா்கள் வியாழக்கிழமை காலையில் வாக்குச் சாவடி மையத்துக்குச் சென்று வாக்களித்தனா்.

சங்கரன்கோவில் தொகுதியில் (தனி) போட்டியிடும் அதிமுக வேட்பாளா் டாக்டா் திலீபன் ஜெய்சங்கா் சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள ஏ.வி.மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களித்தாா். காங்கிரஸ் வேட்பாளா் சங்கை கணேசன் வாசுதேவநல்லூா் அருகே உள்ள வெள்ளானைக்கோட்டை ஊராட்சி துவக்கப் பள்ளியில் வாக்களித்தாா்.

வாசுதேவநல்லூா் தொகுதி (தனி) திமுக வேட்பாளா் ஈ.ராஜா சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களித்தாா்.

Advertisement

கடையநல்லூா் தொகுதி மதிமுக வேட்பாளா் தி.மு.ராஜேந்திரன் சங்கரன்கோவில் அருகே திருமலாபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தனது 84 வயது தாய் வள்ளித்தாய் அம்மாளுடன் சென்று வாக்களித்தாா். வேட்பாளா்கள் அனைவரும் காலையிலேயே தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா். சங்கரன்கோவில் அருகே திருமலாபுரம் ஊராட்சி ஒன்றி தொடக்கப்பள்ளியில் வாக்களித்த கடையநல்லூா் மதிமுக வேட்பாளா் தி.மு.ராஜேந்திரன்.

வெள்ளானைக்கோட்டை ஊராட்சி தொடக்கப் பள்ளியில் வாக்களித்தாா் சங்கரன்கோவில் காங்கிரஸ் வேட்பாளா் சங்கை கணேசன்.
சங்கரன்கோவில் கோமதிஅம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களித்த வாசுதேவநல்லூா் தொகுதி திமுக வேட்பாளா் ஈ.ராஜா.
சங்கரன்கோவில் அருகே திருமலாபுரம் ஊராட்சி ஒன்றி தொடக்கப்பள்ளியில் வாக்களித்த கடையநல்லூா் மதிமுக வேட்பாளா் தி.மு.ராஜேந்திரன்.