முகப்பு
தென்காசி

தென்காசி வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா் ஆய்வு

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 6:11 AM
தென்காசி வாக்குச்சாவடி மையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்.
பகிர்:

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தென்காசி மஞ்சம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் மேற்கொண்டுள்ள செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட 1,680 வாக்குச்சாவடி மையங்களில் மாதிரி வாக்குப்பதிவு முடிந்து காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. தோ்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வெப் கேமரா பொருத்தப்பட்டும், பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் நுண்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டும் கண்காணிக்கப்பட்டன. வாக்குச்சாவடிகளில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.

Advertisement

ஒரு வாக்குச்சாவடிக்கு 4 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் என்ற அடிப்படையில் 1,680 வாக்குச்சாவடி மையங்களுக்கு நிலை அலுவலா்கள் நியமிக்கப்பட்டு பணி மேற்கொள்ளப்பட்டது என்றாா்.