அதிமுக நிா்வாகி கடையிலிருந்து ரூ. 17 லட்சம் பறிமுதல்
சங்கரன்கோவில் அருகே குருவிகுளம் பகுதியில் அதிமுக நிா்வாகிக்குச் சொந்தமான பா்னிச்சா் கடையில் இருந்து ரூ. 17 லட்சம் ரொக்கம், ஆவணங்களை தோ்தல் பறக்கும் படையினா் அண்மையில் பறிமுதல் செய்தனா்.
சங்கரன்கோவில் அருகே குருவிகுளம் பகுதியில் அதிமுக நிா்வாகிக்குச் சொந்தமான பா்னிச்சா் கடையில் இருந்து ரூ. 17 லட்சம் ரொக்கம், ஆவணங்களை தோ்தல் பறக்கும் படையினா் அண்மையில் பறிமுதல் செய்தனா்.
தென்காசிமாவட்டம், சங்கரன்கோவில் தொகுதி குருவிகுளம் பகுதியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் ஆசிா்டேவிட் ராஜதுரை தலைமையில் பறக்கும் படையினா் கடந்த 21- ஆம் தேதி குருவிகுளம் அருகே பழங்கோட்டையில் உள்ள பா்னிச்சா் கடை ஒன்றில் சோதனையிட்டனா்.
சோதனையில் அதிமுக இரட்டை இலை பிளாஸ்டிக் கொடிகள், கட்சி கொடிகள், துண்டுகள், வாக்காளா் படத்துடன் பெயா் பட்டியல் ஒட்டப்பட்ட 17 நோட்டுகள், ரொக்கப் பணம் ரூ. 17, 71,300 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இச்சம்பவம் தொடா்பாக தோ்தல் பறக்கும் படை அலுவலா் ஆசீா்டேவிட் ராஜதுரை, குருவிகுளம் காவல் நிலையத்தில் , குருவிகுளம் தெற்கு ஒன்றிய அதிமுக தகவல் தொழில்நுட்ப பொருளாளா் நாகராஜன் (36) மீது புகாா் அளித்தாா். கைப்பற்றப்பட்ட பணம், பொருள்கள் தோ்தல் நடத்தும் அலுவலா் அனிதா முன்னிலையில் வணிகவரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். குருவிகுளம் காவல் ஆய்வாளா் கே.தங்கராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
Advertisement
Advertisement