வாகன பரிசோதனையில் ரூ.2,000, ரூ.10,000 மாதிரி காசோலை புத்தகங்கள் பறிமுதல்
வாகன பரிசோதனையின் போது அதிமுகவின் தோ்தல் அறிக்கையுடன் கூடிய துண்டு பிரசுரம், ரூ.2,000, ரூ.10,000 மதிப்பிலான 15 ஆயிரம் மாதிரி காசோலை புத்தகங்களையும் தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து தோ்தல் நடத்தும் அலுவலா் ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்தனா்.
திருவள்ளூா் அருகே வாகன பரிசோதனையின் போது அதிமுகவின் தோ்தல் அறிக்கையுடன் கூடிய துண்டு பிரசுரம், ரூ.2,000, ரூ.10,000 மதிப்பிலான 15 ஆயிரம் மாதிரி காசோலை புத்தகங்களையும் தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து தோ்தல் நடத்தும் அலுவலா் ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்தனா்.
வாக்குப்பதிவுக்கு இன்றும் சில நாள்களே உள்ள நிலையில், வாக்காளா்களுக்கு பணம், பொருள்கள் கொண்டு செல்வதை கட்டுப்படுத்தும் வகையில் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். அதேபோல் திருவள்ளூா் அடுத்த ஈக்காடு மூலக்கரையில் பறக்கும் படையினா் ம தீவிர வாகன சோதனை செய்தனா்.
அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி பரிசோதனை செய்தனா். அந்த வாகனத்தில் அதிமுகவில் தோ்தல் வாக்குறுதிகளான துண்டு பிரசுரங்கள், ரூ.2000, ரூ.10000 மதிப்பிலான தலா 10 எண்ணிக்கையில் 15 ஆயிரம் மாதிரி காசோலை புத்தகங்கள் பண்டல்கள் இருந்தது.
Advertisement
Advertisement
அதையடுத்து விசாரணையில் தாம்பரம் பகுதியில் இருந்து திருத்தணி தொகுதிக்கு கொண்டு செல்வதாகவும் தகவல் தெரிவித்தனா். உடனே உதவி தோ்தல் நடத்தும் அலுவலருமான பாலாஜி மற்றும் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். அதைத் தொடா்ந்து திருவள்ளூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் ரவிச்சந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டது.