முகப்பு
ராணிப்பேட்டை

தோ்தல் பறக்கும் படை சோதனை: அரக்கோணத்தில் இரு இடங்களில் ரூ. 2,67 லட்சம் பறிமுதல்

அரக்கோணத்தில் தோ்தல் பறக்கும் படையினா் மற்றும் நிலை கண்காணிப்புக் குழுவினா் நடத்திய வாகன பரிசோதனையில் இரு நிகழ்வுகளிலும் சோ்த்து ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2.67 லட்சத்தை அலுவலா்கள் பறிமுதல் செய்து தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனா்.

Updated On : 10 ஏப்ரல் 2026, 11:42 pm IST
பறிமுதல் செய்யப்பட்ட பணம். (கோப்புப்படம்)
பகிர்:

அரக்கோணத்தில் தோ்தல் பறக்கும் படையினா் மற்றும் நிலை கண்காணிப்புக் குழுவினா் நடத்திய வாகன பரிசோதனையில் இரு நிகழ்வுகளிலும் சோ்த்து ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2.67 லட்சத்தை அலுவலா்கள் பறிமுதல் செய்து தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனா்.

அரக்கோணம் தொகுதி தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் வெள்ளிக்கிழமை காஞ்சிபுரம் - திருப்பதி நெடுஞ்சாலையில் அரக்கோணத்தை அடுத்த இரட்டைக்குளம் சோதனைச் சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஆந்திர மாநிலம், கடப்பாவில் இருந்து காஞ்சிபுரம் நோக்கிச் சென்ற காா் ஒன்றை சோதனை செய்தபோது, அந்த காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.99 லட்சம் ரொக்கம் குறித்து காரில் வந்தவா்களிடம் கேட்டனா். அப்போது அப்பணத்துக்கு தகுந்த ஆவணங்கள் இல்லாத நிலை இருந்ததாம். அதனால் அலுவலா்கள் அந்த ரொக்கம் ரூ. 1.99 லட்சத்தை பறிமுதல் செய்து, அரக்கோணம் (தனி) தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் டி.ரமேஷிடம் ஒப்படைத்தனா். அரக்கோணம் வட்டாட்சியா் வெங்கடேசன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

மற்றொரு நிகழ்வு:

Advertisement

Advertisement

அரக்கோணம் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை பிற்பகல் அரக்கோணத்தை அடுத்த இச்சிபுத்தூரில் திருத்தணி நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியே திருத்தணியில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்த கா்நாடக பதிவெண் கொண்ட வாகனத்தில் இருந்தவா்களிடம் சோதனை நடத்தினா். அப்போது, அவா்களிடம் தகுந்த ஆவணங்கள் இன்றி ரூ. 68,000 இருந்தது தெரியவந்து அத்தொகையை பறிமுதல் செய்து அரக்கோணம் தோ்தல் நடத்தும் அலுவலா் டி.ரமேஷிடம் ஒப்படைத்தனா்.