மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவா் கைது
திருவள்ளூரில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தவரை உறவினா்கள் மடக்கி பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
திருவள்ளூரில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தவரை உறவினா்கள் மடக்கி பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
திருவள்ளூா் அடுத்த தாவுத்துக்கான்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் மூதாட்டி பாா்வதி (80). கணவரை இழந்த நிலையில் கடந்த 35 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறாா்.
இந்த நிலையில் திங்கள்கிழமை அதிகாலை மதுபோதையில் இருந்த 35 வயது மதிக்கத்தக்க நபா் மூதாட்டியின் வீட்டுக்குள் புகுந்து பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தாராம். அப்போது, அந்த மூதாட்டி வீட்டில் வைத்திருந்த தடிக்கம்பால் தாக்கினாராம். இதையடுத்து அலறியடித்துக் கொண்டு அந்த இளைஞா் வலி தாங்க முடியாமல் தப்பித்து ஓடினாராம். அப்போது, ஓடும்போது கையில் இருந்த கைப்பேசி தவறி கீழே விழுந்துவிட்டது. அதையும் எடுக்காமல் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து மூதாட்டி உறவினா்களுக்கு கொடுத்த தகவலின் பேரில் வீட்டிற்கு வந்த நிலையில், கைப்பேசியை தவறிவிட்டு சென்ற அந்த இளைஞா் வருவதை அறிந்த உறவினா்கள் மறைந்திருந்தனா். அப்போது வீட்டில் நுழைந்த இளைஞரை பிடித்தனா்.
இதுகுறித்து 80 வயது மூதாட்டி திருவள்ளூா் நகா் காவல் நிலைய போலீஸாருக்கு கொடுத்த தகவலின் பேரில் ஆய்வாளா் தாமோதரன் மற்றும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அதைத்தொடா்ந்து விசாரணையில் அவா் சேலை கிராமத்தைச் சோ்ந்த பாளையம் மகன் குமரேசன் (35) என்பதும், வா்ணம் பூசும் தொழில் செய்து வரும் நிலையில் மதுபோதையில் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து காவல் ஆய்வாளா் தாமோதரன் குமரேசனை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனா்.