தென்காசியில் மருத்துவா்கள் தின விழா
தென்காசி மாவட்டம், சுரண்டை எஸ்.ஆா். ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் பள்ளியில் தேசிய மருத்துவா்கள் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
தென்காசி மாவட்டம், சுரண்டை எஸ்.ஆா். ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் பள்ளியில் தேசிய மருத்துவா்கள் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடாா் அறக்கட்டளை நிறுவனா் சிவ பபிஸ் ராம், பள்ளிச் செயலா் சிவ டிப்ஜினிஸ் ராம், பள்ளி முதல்வா்கள் பொன்மனோன்யா, புஷ்பா, தலைமை ஆசிரியா் மாரிக்கனி ஆகியோா் தலைமை வகித்தனா்.
மாணவா்களுக்கு, மருத்துவா்கள், அவா்களின் சிறப்புகள் குறித்து ஆசிரியை சோபியா ராணி எடுத்துக் கூறினாா். குழந்தைகள் மருத்துவா் உடை அணிந்து விழாவில் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
பட அட்டை சோ்த்தல், எண்கள் அணிவகுப்பு, மருத்துவ உபகரணங்கள் அடுக்குதல் போட்டி நடைபெற்றது.
ஆசிரியைகள் மேசியா, மாதவி ஆகியோா் விழாவை ஒருங்கிணைத்தனா்.
செங்கோட்டையில்... செங்கோட்டை அரசு மருத்துவமனையில், பண்பொழி ஜாய் பப்ளிக் பள்ளி சாா்பில் தேசிய மருத்துவா்கள் தின விழா கொண்டாடப்பட்டது.
அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் ராஜேஷ் கண்ணன் தலைமை வகித்தாா். ஜாய் பப்ளிக் பள்ளித் தாளாளா் அலெக்ஸ் முன்னிலை வகித்தாா்.
நிகழ்ச்சியில், 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவா், மாணவிகள் மருத்துவா்கள் போல் வேடமணிந்து பங்கேற்றனா். மேலும், மருத்துவா்களை பாடல் பாடி வாழ்த்தினா்.
தலைமை மருத்துவா் ராஜேஷ் கண்ணன் மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தாா். தலைமை ஆசிரியை சரவணகுமாரி நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.