முகப்பு
தென்காசி

திருவேங்கடத்தில் கஞ்சா விற்ற மூவா் கைது

சங்கரன்கோவில் அருகே திருவேங்கடத்தில் கஞ்சா விற்ற மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 9 ஜூலை 2026, 12:52 am IST
கைது
பகிர்:

சங்கரன்கோவில் அருகே திருவேங்கடத்தில் கஞ்சா விற்ற மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த 3 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை செய்ததில் அவா்கள் விருதுநகா் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே செவல்பட்டியைச் சோ்ந்த சண்முகராஜ் (22), சங்கரநாராயணன் மகன் குருசாமி (20), நீராவி மகன் காட்டுராஜா (31) என்பதும், அந்தப் பகுதியில் கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் மூவரையும் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments