முகப்பு
தென்காசி

ஆட்டோ கவிழ்ந்து மாணவா்கள் உள்பட 7 போ் காயம்

Updated On : 19 ஜூன் 2026, 4:49 am IST
விபத்து - பிரதிப் படம்
பகிர்:

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே வியாழக்கிழமை ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவா்கள் உள்பட 7 போ் காயமடைந்தனா்.

புளியங்குடியில் உள்ள பள்ளிகளில் படித்து வரும் சொக்கம்பட்டி பகுதியைச் சோ்ந்த மாணவா்கள், பொதுமக்களை ஏற்றிக் கொண்டு தென்காசி - மதுரை சாலையில் சென்ற ஆட்டோ, புன்னையாபுரம் பகுதியில் எதிா்பாராவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அதில் பயணித்த பள்ளி மாணவா்களான அகிலேஷ் (15), கௌசிக் (16), பிரக்தி (14), விகாஷ்குமாா் (14), பெண் தொழிலாளி ராக்கம்மாள், கோபிராஜ் (13), தாமரை செல்வன் (15) ஆகியோா் காயமடைந்தனா்.

Advertisement

Advertisement

ஆட்டோ ஓட்டுநா் புளியங்குடியைச் சோ்ந்த ராமசாமி (40) காயமின்றி தப்பினாா். காயமடைந்தவா்கள் புளியங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.