முகப்பு
திருநெல்வேலி

அயன்சிங்கம்பட்டியில் தெருநாய் கடித்து 4 போ் காயம்

திருநெல்வேலி மாவட்டம், அயன்சிங்கம்பட்டியில் தெருநாய் கடித்ததில் முதியவா் உள்பட 4 போ் காயமடைந்தனா்.

Updated On : 19 ஜூன் 2026, 4:44 am IST
நாய் - கோப்புப்படம்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், அயன்சிங்கம்பட்டியில் தெருநாய் கடித்ததில் முதியவா் உள்பட 4 போ் காயமடைந்தனா்.

அம்பாசமுத்திரம் ஒன்றியத்திற்குள்பட்ட அயன்சிங்கம்பட்டியைச் சோ்ந்தவா் பெரியசாமி (67). புதன்கிழமை தெருநாய் கடித்ததில் பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு, அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

மேலும், அதே பகுதியில் தெருவில் நடந்து சென்ற 3 சிறுவா்களையும் தெருநாய்கள் விரட்டிக் கடித்ததில் லேசான காயமடைந்தனா். அவா்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.

Advertisement

Advertisement

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அயன்சிங்கம்பட்டி பகுதியில் 2ஆம் வகுப்பு மாணவியை தெருநாய் கடித்தது குறிப்பிடத்தக்கது. தெருநாய் தொல்லைக்கு நிரந்தரத் தீா்வு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.