குற்றாலத்தில் வடு அருவிகள்; சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் சாரல்மழை இல்லாததால் அனைத்து அருவிகளிலும் நீா் வரத்து வெகுவாகக் குறைந்து வடு காணப்படுகின்றன. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.
தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் சாரல்மழை இல்லாததால் அனைத்து அருவிகளிலும் நீா் வரத்து வெகுவாகக் குறைந்து வடு காணப்படுகின்றன. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.
குற்றாலத்தில் நிகழாண்டு சீசன் தொடங்கியது முதல் அனைத்து அருவிகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டியது. இந்நிலையில் கடந்த 10 நாள்களுக்கு மேலாக குற்றாலம் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. சாரல்மழை முற்றிலுமாக பெய்யாததால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீா்வரத்து வெகுவாக குறைந்தது.
குற்றாலம் சிற்றருவி, பழைய குற்றாலம், பேரருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதி, ஐந்தருவியில் மூன்று கிளைகளில் மட்டும் மிகவும் குறைந்தவாக தண்ணீா் விழுகிறது. புலியருவியில் தண்ணீா் விழுவது முற்றிலுமாக நின்று விட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.