முகப்பு
தென்காசி

55 ஆண்டுகளுக்குப் பின் போட்டியிட்டு வாசுதேவநல்லூரில் வென்ற திமுக

வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை தொகுதியில் 55 ஆண்டுகளுக்குப் பின் போட்டியிட்ட திமுக வெற்றி பெற்றுள்ளது.

Updated On : 6 மே 2026, 1:44 am IST
பகிர்:

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை தொகுதியில் 55 ஆண்டுகளுக்குப் பின் போட்டியிட்ட திமுக வெற்றி பெற்றுள்ளது.

வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை தொகுதி தென்காசி மாவட்டத்தில் உள்ள இரண்டாவது தனி தொகுதி ஆகும்.

1967, 1971இல் திமுகவின் வெள்ளைத்துரையும், 1977, 1980இல் மாா்க்சிஸ்ட் கட்சியின் கிருஷ்ணனும், 1984, 1989, 1991இல் காங்கிரஸ் கட்சியின் ஈஸ்வரனும், 1996, 2001இல் தமாகாவின் ஈஸ்வரனும், 2006யஇல் மதிமுகவின் சதன் திருமலைக்குமாரும், 2011இல் அதிமுகவின் துரையப்பாவும் வெற்றி பெற்றனா். 2016 தோ்தலில் அதிமுகவின் மனோகரன், 2021இல் மதிமுகவின் சதன்திருமலைக்குமாா் ஆகியோா் வென்றனா்.

Advertisement

1971=க்குப் பின் இந்தத் தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்படவில்லை. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு வந்த நிலையில் திமுகவினா் மிகவும் சோா்வடைந்து இருந்தனா்.

இத்தோ்தலில் வாசுதேவநல்லூா் தொகுதியை திமுகவுக்கு ஒதுக்க வேண்டுமென அக்கட்சியினா் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா். அதைத் தொடா்ந்து இத்தொகுதி திமுகவிற்கு ஒதுக்கப்பட்டு தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.