களக்காடு தலையணைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
களக்காடு மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் தலையணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
களக்காடு மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் தலையணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து அங்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
களக்காடு மலைப் பகுதியில் கடந்த 2 வாரங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் தலையணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அங்குள்ள தடுப்பணையைத் தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் தலையணைக்கு குடும்பத்துடன் வாகனங்களில் வந்து குளித்துச் செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக வாகன நிறுத்துமிடம் வனத்துறையினரால் விஸ்தரிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகள் தங்கிச் செல்லவும் ஓய்வு விடுதி கட்டப்பட்டு வருகிறது.
இருப்பினும் உடை மாற்றும் அறைகள் குறைந்தளவு இருப்பதால் பெண்கள் சிரமப்படுகின்றனர். கழிப்பிட வசதியின்மையால் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் அவலம் உள்ளது. சம்பந்தப்பட்ட வனத்துறையினர் தலையணையில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, பெண்கள் உடை மாற்றும் அறை, கழிப்பிட வசதி, சுற்றுலாப் பயணிகளின் உடைமைகளைப் பாதுகாக்க பொருள்கள் பாதுகாப்பு அறை, உணவு விடுதி ஆகிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.