முகப்பு
திருநெல்வேலி

பாலர் ஞாயிறு: தேவாலயங்களில் பவனி

பாலர் ஞாயிறு பண்டிகையையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் சிறுவர்-சிறுமிகள் பவனி நடைபெற்றது.

Updated On : 23 ஜூலை 2018, 8:05 am IST
பகிர்:

பாலர் ஞாயிறு பண்டிகையையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் சிறுவர்-சிறுமிகள் பவனி நடைபெற்றது.
தென்னிந்திய திருச்சபையின் திருநெல்வேலி திருமண்டிலம் சார்பில் பாலர் ஞாயிறு பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. சமுதாயத்தில் சிறுவர்-சிறுமிகள் மீது அன்பை அதிகரிக்க வேண்டும். ஆன்மிகத்துடன் குழந்தைகள் வளர வேண்டும். கிறிஸ்துவின் போதனைகளை சிறுவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் ஆகிய நோக்கங்களுக்காக இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. 
அதன்படி நிகழாண்டுக்கான பாலர் ஞாயிறு பண்டிகையையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 150-க்கும் மேற்பட்ட தேவாலயங்களில் ஞாயிறுபள்ளி மாணவர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் பேரணி நடைபெற்றது. மேலப்பாளையம் அருகே சேவியர் காலனியில் உள்ள தூய பேதுரு ஆலயத்தில் நடைபெற்ற பவனிக்கு சபை ஊழியர் பி.கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். ரூபன் தொடக்க ஜெபம் செய்து பேரணியைத் தொடங்கி வைத்தார்.
கிறிஸ்தவ பாடல்களை பாடியபடி குழந்தைகள் சேவியர் காலனியின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனர். தேவாலயத்தில் பேரணி நிறைவடைந்தது. ஞாயிறு பள்ளி பொறுப்பாளர் ஸ்வீட்லீன் உள்பட 70-க்கும் மேற்பட்டோர் பேரணியில் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மேலப்பாளையம் சேகர குரு டேனியல் உத்தரவின்பேரில் தேவாலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments