முகப்பு
திருநெல்வேலி

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 மாதிரி தேர்வு

பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 இலவச மாதிரி தேர்வில் 210 பேர் பங்கேற்றனர்.

Updated On : 5 நவம்பர் 2018, 7:48 am IST
பகிர்:

பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 இலவச மாதிரி தேர்வில் 210 பேர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் சார்பில் இம்மாதம் 11ஆம் தேதி குரூப்-2 தேர்வு நடைபெறுகிறது. இதையொட்டி, திருநெல்வேலி மாவட்ட மைய நூலகம், ஸ்மார்ட் லீடர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாதெமி, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் நடைபெற்ற இலவச மாதிரி தேர்வு முகாமை தொழிலதிபர் பெங்களூரு ரவிஜெயக்குமார் தொடங்கிவைத்தார். தேர்வில், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 210 பேர் கலந்து கொண்டனர். பின்னர் நடைபெற்ற வழிகாட்டுதல் கருத்தரங்கிற்கு வாசகர் வட்டத் தலைவர் அ. மரியசூசை தலைமை வகித்தார். முதன்மை நூலகர் இரா.வயலட் முன்னிலை வகித்தார். போட்டித் தேர்வை எதிர்கொள்ளுதல் குறித்து சார் ஆட்சியர் (பயிற்சி) சுகபுத்ரா, தூய யோவான் கல்லூரி முதல்வர் எஸ். ஜான்கென்னடி, ஸ்மார்ட் லீடர்ஸ் நிர்வாக இயக்குநர் எஸ். சிவராஜவேல் ஆகியோர் பேசினர்.
தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு விஜிலா சத்தியானந்த் எம்.பி., மாவட்ட வருவாய் அலுவலர் பூ. முத்துராமலிங்கம் ஆகியோர் பரிசுகள் வழங்கிப் பாராட்டினர். வாசகர் வட்ட துணைத் தலைவர் கோ. கணபதிசுப்பிரமணியன் வரவேற்றார். நூலகர் அ. முத்துகிருஷ்ணன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments