குருவிகுளத்தில் வேளாண் குழுவினருக்கு கடனுதவி
சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு கடனுதவி வழங்கப்பப்டது.
சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு கடனுதவி வழங்கப்பப்டது.
குருக்கள்பட்டி தற்காப்பு வேளாண்மை உற்பத்தியாளர் குழுவினருக்கு ரூ.8.80 லட்சம், பெரியகோவிலான்குளம் தற்காப்பு வேளாண்மை உற்பத்தியாளர் குழுவினருக்கு ரூ.8.00 லட்சம் என மொத்தம் ரூ.16.80 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது. சங்கத் தலைவர் செல்வராஜ் தலைமை வகித்து மகளிர் குழுவினருக்கு கடனுதவி வழங்கினார். இதில், சங்கத்தின் செயலர் கருப்பசாமி, இயக்குநர் பால்சாமி உள்பட பலர் பங்கேற்றனர்.